Tuesday 30 April 2024

ப்ளாக்பஸ்டர் ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ திரைப்படம், மே 5 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகவுள்ளது


இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர்களில் ஒன்றான, இயக்குநர் சிதம்பரத்தின்  சர்வைவல் த்ரில்லரான 'மஞ்சும்மெல் பாய்ஸ்' திரைப்படத்தை, வரும் மே 5 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.


தமிழ்நாட்டின் கொடைக்கானல் சுற்றுலா பகுதியில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படம், மொழிகள் தாண்டி அனைத்து பிராந்தியங்களில் உள்ள பார்வையாளர்களைக் கவர்ந்தது. உலகெங்கிலும் பரவலாக ரசிக்கப்பட்ட இப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ. 200 + கோடிகளை வசூலித்துள்ளது.


ஒரு சர்வைவல் படத்திற்கான கச்சிதமான  திரைக்கதையுடன், நட்பின் வலிமையைப் பேசிய  மஞ்சும்மெல் பாய்ஸ் தமிழ் ரசிகர்களின் இதயங்களை வென்றது, இன்றுவரை தமிழில் வெற்றிபெற்ற மிகப்பெரிய மலையாள படமாக இப்படம் சாதனை புரிந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்திற்கு தங்கள் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தனர். சிஎஸ்கே வீரர்களுடன் 'தல' எம்எஸ் தோனி ரசிகர்கள் மத்தியில் இப்படத்தைப் பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


கேரளாவைச் சேர்ந்த இளைஞர் குழுவினர் தமிழ்நாட்டின் கொடைக்கானலுக்குச் சுற்றுலா செல்கிறார்கள். அந்தப் பயணத்தின் போது, குணா குகையைப் பார்வையிடுகிறார்கள், ​​ அப்போது ஒருவர் தவறி குகைக்குள் விழுந்துவிட நண்பனைக் காப்பாற்றப் போராடுகிறார்கள், அவர்கள் நண்பனைக் காப்பாற்றினார்களா? என்பது தான்  மஞ்சும்மேல் பாய்ஸ் படம். மனித மன உறுதி, சகிப்புத்தன்மை மற்றும் நட்பின் பெருமையை அழகாக எடுத்துக்காட்டுகிறது இப்படம்.


சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ், கணபதி மற்றும் ஜீன் பால் லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு, சுஷின் ஷியாம் இசையமைக்க, ஷைஜு காலித் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


பாபு ஷாஹிர், சௌபின் ஷாஹிர் மற்றும் ஷான் ஆண்டனி தயாரித்துள்ள இப்படத்திற்கு விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்துள்ளார்.


வரும் மே 5 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ திரைப்படத்தைக் கண்டுகளியுங்கள். 


டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முன்னதாக ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்கள் தங்கள் பொழுதுபோக்கைப் பார்க்கும் முறையை மாற்றி அமைத்துள்ளது. ரசிகர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்வுகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது, மற்றும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது.

Thursday 25 April 2024

சமூகத்திற்கான நல்ல படங்களை நடிகர்களால் கொடுக்க முடியாது - ‘உழைப்பாளர் தினம்’ பட விழாவில் இயக்குநர் சந்தோஷ் நம்பீராஜன் பேச்சு

 


சந்தோஷ் நம்பீராஜன் தயாரித்து இயக்கியிருக்கும் ‘உழைப்பாளர்கள் தினம் படத்தின் இசை வெளியீட்டு விழா ஏப்ரல் 22 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இயக்குநரும் நடிகருமான ராஜ்கபூர், தயாரிப்பாளர் நந்தகுமார் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.


நிகழ்ச்சியில் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், 


56 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஒரு நகரமாக இருக்க கூடிய சிங்கப்பூர் தேசத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தொடர்பான படம் என்று சொன்னார்கள். குறிப்பாக உழைப்பாளர்கள் தினம், உழைப்பாளர்கள் பற்றி, உழைக்கும் மக்கள் பற்றி ஏராளமான படங்கள் வந்திருக்கிறது என்றாலும், 1886 ஆம் ஆண்டு அமெரிக்காவில் சிக்காகோ நகரத்தில், மிகப்பெரிய அளவிலான எழுச்சியை தொடர்ந்து மே மாதம் 1 ஆம் உலக பாட்டாளி வர்க்கத்தினர் அனைவரும் உழைப்பாளர்கள் தினமாக கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தியது. இன்று உலகத்தில் நாடு கடந்து, மதம் கடந்து, சாதி கடந்து, கலாச்சாரங்கள் கடந்து கொண்டாடப்படும் ஒரு தினம் என்றால் அது உழைப்பாளர்கள் தினம் மட்டுமே, வேறு எந்த தினமும் இல்லை. அப்படிப்பட்ட மே தினத்தை மையமாக கொண்ட இந்த ‘உழைப்பாளர்கள் தினம்’ படம் என்பது நிச்சயம் பாராட்டுக்குரியது.


2010-ல் கட்சியின் மாநில செயலாளராக நான் பொறுப்பேற்றேன், அடுத்து இரண்டு ஆண்டுகளில் மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தரை சந்த்தேன். அவரை நான் சந்திக்கும் முன்பு ஒரு புத்தகத்தில் சினிமா பற்றிய செய்திகளை படித்துவிட்டுச் சென்றேன். அப்போது அவரிடம், “அன்று இருந்த எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி இருவருடைய ஃபார்முலாவில் நீங்கள் பயணிக்கவில்லை, அப்படி இருந்தும் வெற்றி பெற்றது எப்படி?” என்று கேட்டேன். அதற்கு அவர், “நான் சினிமாவுக்கு வந்த போது, இப்போது இருக்கிற மாதிரி ஹாலிவுட் படங்களை பார்க்கும் வசதி இல்லை. இப்போது பத்து ஹாலிவுட் படங்களை பார்த்துவிட்டு, அதில் இருந்து ஒரு கதையை தயார் செய்துவிடுகிறார்கள், எங்களுக்கு அப்படிப்பட்ட வசதியில்லை. அதனால், எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி இருவரிடமும் போகாமல் தனி பாதையில் பயணிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அப்படி இருந்தும் எம்.ஜி.ஆர் படம் பண்ணலாம் என்று என்னிடம் பலமுறை கேட்டிருக்கிறார். ஆனால்,உங்களை வைத்து படம் பண்னும் அளவுக்கு நான் திறமைசாலி இல்லை என்று சொல்லி நான் மறுத்துவிடுவேன். இருந்தாலும், அவருடைய கட்டாயத்தின் பேரில் ‘தெய்வத்தாய்’ என்ற படத்திற்கு மட்டும் திரைக்கதை, வசனம் எழுதினேன் என்றார்.


படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான சந்தோஷ் நம்பீராஜன் பேசுகையில்,


இந்த படத்தின் கதையை நான் பல தயாரிப்பாளர்களிடம் சொல்லியிருக்கிறேன். ஆனால், வெளிநாட்டு உழைப்பாளர்களைப் பற்றிய படம் இங்கு எப்படி ஓடும், வெளிநாடுகளில் ஓடிடி வந்துவிட்டதே, அவர்கள் இதை எப்படி பார்ப்பார்கள் என்று சொன்னார்கள். ஆனால், உழைப்பாளர் தினம் என்ற தலைப்பை சொன்ன உடன் சிங்கப்பூர் துரைராஜ், ரஜேந்திரன் சார், எங்க அண்ணன் நம்பிராஜன், கடலூர் ஜான், பொண்ணுசாமி புருஷோத்தமன், பாண்டுதுரை, சரஸ் என அனைவரும் குழுவாக சேர்ந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறோம்.


தற்போதைய தமிழ் சினிமா எப்படி இருக்குனா, ஒரு நகைச்சுவை நடிகரோட ஒரு நாள் சம்பளம் 10 லட்சம், அவரோட உதவியாளருக்கு 30 ஆயிரம் ரூபாய், அதில் 2 ஆயிரத்தை மட்டுமே அவருக்கு கொடுத்துவிட்டு, மீதியை அந்த நடிகரே எடுத்துக்கொள்வதாகவும் சொல்லப்படுகிறது. அதே சமயம், 10 ஆயிரம் ரூபாய் இல்லாமல் சேசு என்ற நகைச்சுவை நடிகர் இறந்து போகிறார். கடந்த ஆண்டு போண்டா மணி என்ற ஒரு நடிகர் இறந்து போகிறார். ‘அங்காடித் தெரு’ பட நடிகைக்கும் இதே நிலை தான் ஏற்பட்டது. இது மிகவும் வருத்தமளிக்கிறது. நடிகர் சங்கம் இருக்கிறது, இன்று சங்கத்திற்கான கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபடுகிறார்கள். செங்கலையும், சிமெண்டையும் கொண்டு எழுப்பும் கட்டிடத்தை விட மனித உயிர் தான் முக்கியம், ஒரு நடிகரின் வாழ்க்கையை காப்பாற்றாத சங்கம் எதற்கு. இது மிகவும் வருத்தப்படக்கூடிய விசயம். 


லோகேஷ் கனகராஜ், நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்புராஜ், மாரி செல்வராஜ், பா.இரஞ்சித், வெற்றிமாறன்  போன்ற திறமையான இயக்குநர்கள் அனைவரும் சிறிய படங்கள் மூலம் தான் தங்களை நிரூபித்துக்காட்டினார்கள். ஆனால், அவர்களுடைய அடுத்தடுத்த படங்களில் சிறிய நடிகர்களுடன் பணியாற்றாமல் பெரிய பெரிய நட்சத்திர ஹீரோக்களுடன் பயணிக்கிறார்கள். இது சொம்பு தூக்குற மாதிரி, பல்லக்கு தூக்குற மாதிரி இருக்கிறது. வசூல் பின்னால் போனால் அவர்களுடைய வாழ்க்கை நிலையாக இருக்க முடியாது. இதே பாரதிராஜா சாதாரண ஒரு வளையல் கடையில் இருந்தவரை ஹீரோவாக்கினார்.


தமிழ் தெரியாமல் கர்நாடகாவில் இருந்து வந்தவரை பாலச்சந்தர் நடிக்க வைத்து சூப்பர் ஸ்டாராக்கினார். அதனால் தான் இவர்கள் பற்றி இன்னமும் பேசப்படுகிறது. இந்த விசயத்தை நான் இங்கு பேசுவதற்கு காரணம் என்னுடைய இயக்குநர் தான். அவர் எந்தவித பொருளாதார நிலையை எதிர்பார்க்காமல் என்னை ஹீரோவாக்கினார்.  இங்கு ஹீரோவுக்கு தான் அதிகம் செலவு செய்கிறார்கள். இதே நிலை நீடித்தால் தமிழ் சினிமா இதைவிட மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்கும். 


இங்கு யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் அது தவறில்லை. ஆனால், சினிமாவில் 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிவிட்டு, சக நடிகர்களுக்காகவோ, கலைஞர்களுக்காகவோ எந்தவித சமூக சீர்திருத்தங்களையும் செய்யாமல், அரசியலுக்குள் நுழைகிறார்கள் என்றால், 1000 கோடி ரூபாய் நோக்கி அவர்கள் நகர்கிறார்கள் என்று தான் அர்த்தம். 


500 கோடி ரூபாயில் திரையரங்க நகரம் தேவையில்லை, அதற்கு பதில் 50 நகரங்களை தேர்ந்தெடுத்து 50 திரையரங்கங்களை உருவாக்க வேண்டும். சிறிய அளவிலான திரையரங்கங்களை திறக்க வேண்டும். திரையரங்கு மூலமாக அரசுக்கு ரூ.10 முதல் ரூ.12 கோடி வரை வருவாய் கிடைக்கும். பேருந்து நிலையங்களில் வைக்கலாம், பேருந்துக்காக காத்திருப்பவர்கள் படம் பார்ப்பார்கள். பார்க்கிங், கேண்டீன் என மிகப்பெரிய வியாபாரம் இருக்கிறது. இப்படி அரசு திரையரங்கம் திறக்க வேண்டும் என்று சொன்னதும், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் பயப்பட வேண்டாம். பிறகு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து இதுபோன்ற திட்டங்களை கிடப்பில் போட்டுவிடுவார்கள். அரசு பள்ளியால் தனியார் பள்ளிக்கு பாதிப்பில்லை, சமூக நலக்கூடங்களால் திருமண மண்டபங்களுக்கு பாதிப்பில்லை, ரேஷன் கடைகளினால் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு பாதிப்பில்லை, அப்படி தான் அரசு திரையரங்கத்தால் மற்ற திரையரங்கிற்கு எந்த பாதிப்பும் வராது.


சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட நடிகரும் இயக்குநருமான ராஜ்கபூர் பேசுகையில், 


பொதுவாக சினிமா விழா என்றாலே சினிமா பிரபலங்களை வரவைத்து பிரமாண்டமாக நடத்துவாங்க. ஆனால், இங்கு உழைப்பாளர்களுகாக உழைக்கின்ற ஒரு தலைவரை சிறப்பு விருந்தினராக அழைத்து வந்தது புதிதாக தான் இருக்கிறது. இந்த குழுவினரை பற்றி எனக்கு தெரியாது, எனது நண்பர் சிங்கப்பூர் துரைராஜ் தான் என்னை அழைத்தார். இன்று கதைக்கும் தலைப்புக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லாமல் இருக்கிறது. காதல், ஆக்‌ஷன் என ஜானருக்கு பொருத்தம் இல்லாத தலைப்பை வைப்பது தான் டிரெண்ட், ஆனால் நீங்க உழைப்பாளர் தினம் என்று ஏன் தலைப்பு வச்சிங்க என்று கேட்டேன். படத்தின் லைன் சொன்ன போது என் மனதை பாதித்துவிட்டது,உழைப்பாளர்கள் தினம் படத்திற்காக உழைத்த அனைவருக்கும் எனது வாழ்த்துகளை கூறிக்கொண்டு படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகிறேன் என்றார்.

 

தயாரிப்பாளர் நந்தகுமார் பேசுகையில்,


”கம்யூனிசத்தலைவர் கலந்துக்கொண்ட இந்த நிகழ்ச்சியை பெருமையாக பார்க்கிறேன். நண்பர் சிங்கப்பூர் துரைராஜ் மூலமாகத் தான் இங்கே வந்தேன். இந்த மேடையை ஒரு புத்துணர்ச்சி மிக்கதாகவும், அறிவுச்சார்ந்தததாகவும் பார்க்குகிறேன். இயக்குநர் சந்தோஷ் பேசிய எதிலும் நான் இல்லை. நான் தயாரிப்பாளராக ஐந்து படம் பண்ணியிருக்கேன், எக்ஸ்கியூட்டி கம் தயாரிப்பாளராக ஐந்து படம் பண்ணியிருக்கேன். நான் சென்னைக்கு வந்து 20 வயதிலேயே ரெப்பாக சாதாரணமாக இருந்து, சிறு சிறு படங்களை வாங்கி விநியோகஸ்தராக வளர்ந்தேன். பிறகு தயாரிப்பாளராகலாம் என்று தான் கலாபக்காதலன் என்ற படம் பண்ணேன். அதை தொடர்ந்து அடுத்தடுத்து 10 படங்கள் தயாரித்தேன், அதில் 8 படங்கள் எனக்கு பெரும் நஷ்ட்டத்தை கொடுத்தது. விமல், ஓவியாவை வைத்து ‘சில்லுனு ஒரு சந்திப்பு’ படம் தயாரித்தேன், அதன் பிறகு எனது சினிமா வாழ்க்கையே முடிந்துவிட்டது. அதேபோல், அறிமுக இயக்குநரை வைத்து நான் தயாரித்த 96 படமும் எனக்கு வெற்றியை கொடுத்தது. எனக்கு வெற்றி கொடுத்தவர்கள் என்றால் அது புதியவர்கள் தான், 


நம்ம இங்கு உணர்வுகளையும், உண்மையான உணர்ச்சிகளையும் அடக்கி வைத்துக்கொண்டு வெற்றி பெறுவதை தான் இலக்காக கொண்டு பயணிக்க வேண்டும். சந்தோஷுக்கு இருக்கும் அனைத்து உணர்வுகளும் எனக்கும் இருந்தது. இங்கு மிகப்பெரிய தலைவர் இருக்கிறார். ஆனால், இவரை நாம் மேடையில் உட்கார வைத்து என்றைக்காவது ரசித்தோமோ இல்லை. இங்கு அரசியல் நம்மை அடிமையாக்கி வைத்திருக்கிறது. அதை எல்லாம் இங்கு நான் பேச வரவில்லை. இங்கு ஒரு நல்ல படம், நல்ல திரைக்கதை மட்டுமே அதை நல்ல படமாக கொடுத்திட முடியாது, அதற்கு நிறைய விசயம் இருக்கிறது. திரைக்கும், ரசிகர்களுக்கும் இடையே இருக்கும் தூரத்தை குறைக்க வேண்டும், அதற்கான விசயங்கள் படத்தில் இருக்க வேண்டும். இயக்குநர் சந்தோஷ் நீங்கள் முதலில் வெற்றி பெற்றுவிடுங்கள், சந்தோஷ் யார்? என்பதை தெரியப்படுத்துங்கள், பிறகு நீங்கள் என்ன பேச வேண்டுமோ அதை பேசினால், அது மக்களிடம் எளிதில் சென்றடையும்.


படத்தின் கதாநாயகி குஷி பேசுகையில், 


“நான் கர்நாடாக மாநிலத்தைச் சேர்ந்தவள், இந்த படத்தில் மாலதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த சந்தோஷ் சாருக்கு நன்றி. இயக்குநர் இது கிராமத்து கதை, தமிழ் வசனங்களை சரியாக பேசுவீங்களா? என்று கேட்டார். நான் உடனே முயற்சிக்கிறேன் சார், என்றேன். என்னை நம்பி அவர் இந்த வாய்ப்பை கொடுத்தார். படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே அந்த கிராமத்திற்கு என்னை அழைத்துச் என்று அம்மக்களுடன் பழக வைத்தார்கள். அதன் மூலம் கிராம வாழ்க்கையை பற்றி தெரிந்துக்கொண்டேன். அதேபோல், எடுக்க கூடிய காட்சி பற்றியும், அதற்காக வசனங்கள் பற்றியும் எனக்கு முன்பே சொல்லிவிடுவார்கள், அதனால் நான் பயிற்சி எடுத்து சிறப்பாக நடித்தேன். நம்புகிறேன், அப்படி ஒரு வேடத்தில் என்னால் முடிந்தவரை நடித்திருக்கிறேன், பார்த்துவிட்டு ஆதரவு தாருங்கள்.” என்றார்.


இசையமைப்பாளர் மசூத் பேசுகையில்,


“நான் கேரளாவைச் சார்ந்தவன் என்பதால் எனக்கு தமிழ் சரியாக பேச வராது, அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த சந்தோஷ் சாருக்கு நன்றி. 15 வருடங்களாக கனவோடு சுற்றிக்கொண்டிருந்தேன். அவர் சொன்னது போல் நாம் அனைவரும் உழைப்பாளர் தான். நானும் 6 வருடங்கள் வெளிநாட்டில் பணியாற்றியிருக்கிறேன். அதனால், இந்த படம் சொல்லும் வலி எனக்கு புரிந்தது, அதனால் எனக்கு பணியாற்ற சுலபமாக இருந்தது. இங்கு பல ஜாம்பவான்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு மத்தியில் நானும் ஒரு இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறேன், எனக்கும் ஆதரவு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.” என்றார்.

நடிகர் அஜித் குமாரின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘பில்லா’ மே 1, 2024 அன்று மீண்டும் வெளியாகிறது!


ஸ்லீக் அண்ட் ஸ்டைலிஷ் தோற்றத்தில் திரையை அதிர விடும் அஜித்குமாரின் ஸ்கிரீன் பிரசன்ஸோடு தலைசிறந்த படைப்பான 'பில்லா' படத்தை இயக்குநர் விஷ்ணுவர்தன் திறமையாக மறுஉருவாக்கம்  செய்திருந்தார். 'பில்லா' படம் வெளியான சமயத்தில் இருந்தே ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் இந்தப் படம் பாராட்டுகளைப் பெற்றது. மேலும், படம் வெளியாகி பல ஆண்டுகள் ஆகி இருந்தாலும் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் விரும்பி பார்க்கும் படமாக இது உள்ளது. இப்போது, 'பில்லா' ரீ-ரிலீஸ் என்ற செய்தி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. ​​​​


ஜிபி என்டர்டெயின்மென்ட்டின் அரவிந்த் சுரேஷ் குமார் & டாக்டர் ஞானபாரதி ஆகியோர் மே 1, 2024 அன்று தமிழ்நாடு முழுவதும் ஏடிஎம் புரொடக்ஷன்ஸ் மூலம் 150+ திரைகளில் இந்தப் படத்தை வெளியிடுகிறார்கள்.


ஜிபி என்டர்டெயின்மென்ட் அரவிந்த் சுரேஷ் குமார் & டாக்டர் ஞானபாரதி 'பில்லா' படத்தை மீண்டும் வெளியிடுவதில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். "இந்தத் திரைப்படம் வெற்றிகரமான ரீமேக்குகளில் ஒன்றாக சினிமாத் துறையில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளது. 'பில்லா' திரைப்படத்தின் திரையரங்க வெளியீடு அஜித் ரசிகர்களுக்கு அப்பாற்பட்டு அனைத்துத் தரப்பு பார்வையாளர்களையும் கவர்ந்த ஒரு பிரமாண்டமான கொண்டாட்டமாக அமைந்தது. மே 1, 2024 அஜித்குமார் சாரின் பிறந்தநாளை ஒட்டி, தமிழ்நாட்டில் 150க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்தப் படத்தை மீண்டும் வெளியிட ஏடிஎம் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்றனர். 


விஷ்ணுவர்தனின் ஸ்டைலான மேக்கிங்கில் அஜித்குமார் நடிப்பில் வெளியான 'பில்லா' பாக்ஸ் ஆஃபிஸில் அற்புதமான சாதனையைப் படைத்தது. அஜித்குமாரின் இரட்டை வேடத்தில் நடித்திருக்க, நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தார். நீரவ் ஷாவின் கண்கவர் காட்சியமைப்பு மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவின் பவர் பேக் இசை ஆகியவை பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத சினிமா அனுபவத்தை வழங்கின.

ரசிகர் மரணம், வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி !!


சென்னை எம் ஜி ஆர் நகர் ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தில் தலைவராக இருந்த, சென்னை கே கே நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ராஜா (வயது 33) அவர்கள் சமீபத்தில் உடல் நலக்குறைவால் காலமானார். ஜெயம் ரவி மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவரான  ராஜா, ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல நற்பணிகள் செய்து வந்தார். 


தனது ரசிகனின் திடீர் மரணத்தை அறிந்த ஜெயம் ரவி, ராஜாவின் வீட்டுக்குச் சென்று, அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் குடும்பத்திற்கு எந்த உதவியானாலும் தான் செய்து தருவதாக உறுதியளித்தார்.

Friday 19 April 2024

தமன்குமார் நடிக்கும் 'ஒரு நொடி' படத்தின் இசை வெளியீடு


தயாரிப்பாளரும், திரைப்பட விமர்சகரும், விநியோகஸ்தருமான தனஞ்ஜெயனின் கிரியேட்டிவ் எண்டர்டெய்ன்மென்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் உலகம் முழுவதும் ஏப்ரல் 26 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியிடும் தமன்குமார் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'ஒரு நொடி' எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதன் போது நடிகரும், சமூக செயற்பாட்டாளருமான ஆரி அர்ஜுனன் படத்தின் இசையை வெளியிட, தயாரிப்பாளர் சி. வி. குமார், நடிகரும், அரசியல்வாதியும், இலக்கியவாதியுமான பழ. கருப்பையா, எழுத்தாளரும், நடிகருமான வேல. ராமமூர்த்தி உள்ளிட்ட பட குழுவினர் பெற்றுக் கொண்டனர்.‌


இயக்குநர் பி. மணிவர்மன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஒரு நொடி' எனும் திரைப்படத்தில் தமன்குமார், எம். எஸ். பாஸ்கர், வேல.ராமமூர்த்தி, பழ. கருப்பையா, ஸ்ரீ ரஞ்சனி, கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. ஜி. ரத்தீஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சஞ்சய் மாணிக்கம் இசையமைத்திருக்கிறார். திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படத்தை மதுரை அழகர் மூவிஸ் மற்றும் ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் அழகர் ஜி மற்றும் கே.ஜி. ரத்தீஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை கிரியேட்டிவ் எண்டர்டெய்ன்மென்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் சார்பில் பிரபல விநியோகஸ்தர் ஜி. தனஞ்ஜெயன் வழங்குகிறார்.


இம்மாத இறுதியில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இதன் போது நடிகரும், சமூக செயற்பாட்டாளரும், பிக் பாஸ் பிரபலமுமான ஆரி அர்ஜுனன், தயாரிப்பாளரும், இயக்குநருமான சி. வி. குமார், நடிகரும், பேச்சாளருமான ஈரோடு மகேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் இவர்களுடன் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களும், நடிகர்களும் கலந்து கொண்டனர்.


*படத்தின் இயக்குநர் மணிவர்மன்* பேசுகையில், '' எங்களுடைய ஒரு நொடி திரைப்படத்திற்காக பல நொடிகளை செலவு செய்து இங்கு வாழ்த்த வருகை தந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. படப்பிடிப்பு தளத்தில் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியது போல்.. படத்தின் விளம்பர நிகழ்வுகளிலும் தங்களின் முழுமையான பங்களிப்பை வழங்கியிருக்கும் இப்படத்தில் பணியாற்றிய நடிகர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


நாம் வாய்ப்புகளைத் தேடி அலையும் போது நம்மை மற்றவர்கள் பார்க்கும் பார்வை வேறாக இருக்கும். ஆனால் தயாரிப்பாளர் அழகர் என்னை நம்பி இந்தத் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கினார். அதற்காக அவருக்கு சிறப்பு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்த திரைப்படத்தின் கதையை கேரளாவில் உள்ள ஒரு இயக்குநருக்காக உருவாக்கி.. அதை முதலில் இப்படத்தின் ஒளிப்பதிவாளரான ரத்தீஷிடம் சொன்னேன். கதையை முழுவதுமாக கேட்ட ரத்தீஷ், இந்த திரைப்படத்தை நாம் இணைந்து உருவாக்கலாம் என்றார். இந்த படத்திற்கு அவரும் இணை தயாரிப்பாளர்.


சின்ன பட்ஜெட் படம் என்பதால் எனக்கு எந்தவித நெருக்கடியும் அளிக்காமல் நான் கேட்ட விசயங்களை தயாரிப்பாளர் தாராள மனதுடன் வழங்கினர். மதுரையில் படப்பிடிப்பு தளத்தில் பல சிரமங்களுக்கு இடையே முழுமையாக ஒத்துழைப்பு வழங்கி படத்தின் படப்பிடிப்பிற்கு உதவினார்.


படப்பிடிப்பு நிறைவடைந்து டப்பிங் பணிகளைத் தொடங்கிய போது ஒரு வேடத்திற்காக டப்பிங் பேச கேபிள் சங்கரை அழைத்தேன்.  அவர் இப்படத்தினை பார்த்து சிலாகித்து பாராட்டினார். அத்துடன் இல்லாமல் தமிழ் சினிமாவின் முக்கிய முகமாக அறியப்படும் தனஞ்ஜெயனை அழைத்து வந்து படத்தை காண்பித்தார். இன்றைக்கு இந்த திரைப்படம் இந்த அளவிற்கு மக்களை சென்றடைந்திருக்கிறது என்றால்... அதற்கு கேபிள் சங்கரும், தனஞ்ஜெயனும் தான் முக்கியமான காரணம். இதற்காக இவர்கள் இருவருக்கும் நன்றி. ‌


தணிக்கை குழுவினர் இந்த படத்தை பார்த்துவிட்டு, 'நாங்கள் பார்த்த திரில்லர் திரைப்படங்களில் ஒரு நொடி வித்தியாசமாக இருக்கிறது. அதிலும் கிளைமாக்ஸ் எங்களால் யூகிக்கவே முடியவில்லை. மிகவும் அற்புதமான படைப்பு ' என பாராட்டு தெரிவித்தனர். இது எனக்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளித்தது.


இந்த படத்தைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால்... எல்லோருடைய வாழ்க்கையிலும் நடைபெறும் ஒரு நொடி... அந்த ஒரு நொடி எதைப் பற்றியதாக வேண்டுமானாலும் இருக்கலாம். எப்படி வேண்டுமானாலும் மாறலாம். அப்படி ஒரு நொடியில் நடைபெற்ற நடந்த சம்பவம் தான் இந்த படத்தின் கதை. மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் நடந்த உண்மை சம்பவங்களை தழுவி படத்தின் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறோம். படத்தைப் பார்த்த அனைவரும் பாராட்டியுள்ளனர். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.


இந்த விழாவின் நாயகன் இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம்.  அறிமுக இசையமைப்பாளர். இவரின் இசையில் உருவான பாடல்களை கேட்டிருக்கிறேன். திறமை இருக்கிறது. அதனால் வாய்ப்பு அளித்திருக்கிறேன். இந்தத் திரைப்படம் மியூசிக்கலாகவும்  நன்றாக வந்திருக்கிறது. இதற்காக அர்ப்பணிப்புடன் உழைத்த இசையமைப்பாளருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படம் வெளியான பிறகு இசையமைப்பாளருக்கும் நல்லதொரு அடையாளமும், அங்கீகாரமும் கிடைக்கும்'' என்றார்.


*ஒளிப்பதிவாளரும், இணை தயாரிப்பாளருமான கே. ஜி. ரத்தீஷ்* பேசுகையில், '' ஒயிட் லாம்ப் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு இது. சிறிய தயாரிப்பு நிறுவனம். ஒரு நொடி படத்தின் இன்றைய நிலைக்கு கேபிள் சங்கரும், தனஞ்ஜெயனும்தான் காரணம். அவர்களுக்கு கோடான கோடி நன்றி. ஒளிப்பதிவாளராக நிறைய இயக்குநர்களிடம் கதை கேட்டு இருக்கிறீர்கள். ஆனால் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறீர்கள் ஏன்? என் நண்பர்கள் கேட்டார்கள். என் நண்பனுக்கு நான் செய்யாமல் வேறு யார் செய்வார்கள்?  நன்றி.'' என்றார்.


*படத்தின் இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம்* பேசுகையில், '' வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. படத்தில் பணியாற்றும்போது இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் என் இரண்டு புறத்திலும் இரண்டு துண்களாக இருந்து ஆலோசனைகளை சொல்வார்கள். இந்தப் படத்தின் கதையை இயக்குநர் எழுதி முடித்தவுடன் என்னிடம் முழு கதையை விவரித்தார். முதலில் ஒப்புக்கொள்ள தயங்கினேன். அதன் பிறகு,' உனது திறமை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. துணிந்து பணியாற்று' என நம்பிக்கை அளித்தார்.


படத்திற்கு பின்னணியிசை அமைக்கும் போது வியப்பாக இருந்தது. முதன்முதலாக இரண்டரை மணி நேர திரைப்படத்திற்கு இசையமைக்க போகிறோம் என்ற மலைப்பு இருந்தது. ஆனால் ஒவ்வொரு காட்சிக்கும் இயக்குநர் எனக்கு முழுமையான வழிகாட்டினார். இதற்காக இயக்குநருக்கு சிறப்பான நன்றி.


இந்த திரைப்படத்தில் மூன்று பாடல்கள் இருக்கிறது. டைட்டில் சாங்.. அப்பா - பொண்ணு இடையிலான சாங்.. ஒரு லவ் சாங்... என மூன்று பாடல்கள் இருக்கிறது. மூன்று பாடல்களையும் பாடலாசிரியர்கள் உதயா அன்பழகன், ரவிசங்கர், ஜெகன் கவிராஜ் என மூன்று பாடலாசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள். இந்த மூன்று பாடல்களையும் சூப்பர் சிங்கர் சத்ய பிரகாஷ், என்னுடைய நண்பர் வருண் சந்திரசேகரன் மற்றும் நான் பாடல்களை பாடி இருக்கிறோம். என்னுடைய கல்லூரியில் உள்ள இசைக்குழுவினரை அழைத்து வந்து, படத்திற்காக இணைந்து பணியாற்றியிருக்கிறோம். '' என்றார்.


*படத்தின் தயாரிப்பாளர் அழகர் ஜி* பேசுகையில், '' ஒரு நொடி படத்தின் பணிகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மேற்கு கோபுர வாசலிலிருந்து தொடங்கினேன். இந்த படத்தினை இயக்குநர் மணிவர்மன் சிறப்பாக இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் கே ஜி ரத்தீஷும் தன் பணியை சிறப்பாக செய்திருக்கிறார். தனஞ்ஜெயன் எங்களையும், எங்கள் குழுவையும் மிக உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். இதற்காக அவருக்கு எங்கள் 'ஒரு நொடி' படக் குழு சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.'' என்றார்.


*நாயகன் தமன்குமார்* பேசுகையில், '' ஒரு நொடி... ஒருவருக்கு ஒருவர் எப்போது உதவி செய்து கொண்டு தான் இருப்போம். ஆனால் நிறைய பேர் நம்மை பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள். இது உதவி செய்யும் போது தெரியாது. கொஞ்சம் நாட்கள் கழித்து அல்லது கொஞ்சம் மாதங்கள் கழித்து.. நம்மை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு நொடியில் நமக்கு புரிய வரும். சினிமாவில் இது போன்ற அனுபவங்கள் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும். சில பேருடைய வாழ்க்கையிலும் இது ஏற்பட்டிருக்கும். சில பேருக்கு இது குடும்பத்தில் ஏற்பட்டிருக்கலாம். சிலருக்கு உடனிருக்கும் நண்பர்களால் ஏற்பட்டிருக்கலாம். என்னுடைய வாழ்க்கையில் என்னை பயன்படுத்திக் கொண்டவர்களை நான் மறந்து விட்டேன். ஆனால் உதவி செய்தவர்களை ஒருபோதும் மறக்கவில்லை.‌ என் வாழ்க்கையில் முக்கியமாக ஒருவர் உதவி செய்தார் என்றால்... அது ஈரோடு மகேஷ் தான். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அவர் இல்லை என்றால்... கடந்த பத்து பன்னிரண்டு ஆண்டுகளாக திரைத்துறையில் நான் இருந்திருக்க மாட்டேன்.


தற்போது ஒரு நொடி படத்தில் நடித்ததால் அனைத்தையும் கடந்து நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். அவை சுமாரான வெற்றியை பெற்றிருக்கின்றன. சில படங்கள் வெளிவராமல் இருந்திருக்கின்றன. இந்த நிலையில் ஊடகவியலாளர்களான நீங்கள் என் மீது அக்கறை கொண்டு ஊக்கப்படுத்தினீர்கள். இதற்காக இந்த தருணத்தில் நான் உங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்தத் திரைப்படத்திற்கு மிகப்பெரிய பக்கபலம் தயாரிப்பாளர் தான். நல்ல நடிகர்கள் எப்போதும் தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை தேடிக்கொண்டே இருப்பார்கள். இதனை ஒரு தயாரிப்பாளரால் தான் முதலீடு செய்து தகுதியான கலைஞர்களையும், நடிகர்களையும் உருவாக்க முடியும்.‌ இந்த திரைப்படத்தை நம்பி முதலீடு செய்து என்னை போன்ற திறமையான நடிகர்களை... மணி வர்மன் போன்ற திறமையான இயக்கநரையும் ..தயாரிப்பாளர் அழகரால் தான் உருவாக்க முடியும். இதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  படப்பிடிப்பின் போது ஏராளமான நெருக்கடிகளும், அழுத்தங்களும் ஏற்பட்டன. இருந்தாலும் தயாரிப்பாளர் அதனை எளிதாக கையாண்டு படத்தை உருவாக்கினார். முதலில் அவர் திரைப்படம் தயாரிப்பதை.. அவருடைய குடும்பத்தினருக்கு தெரிவிக்கவில்லை.‌ இப்போதுதான் அவர்களுக்கு தெரியும். யாருக்கும் தெரியாமல் ரகசியமாக அவருடைய ஊரில் தான் படப்பிடிப்பை நடத்தினார்.



இந்தப் படத்திற்கு தூணாக விளங்கிய மற்றொருவர் கே ஜி ரத்தீஷ். ஒளிப்பதிவாளர் மட்டுமல்ல இணை தயாரிப்பாளர் கூட. அவருடைய பங்களிப்பு என்பது ஈடு இணையற்றது. படம் பார்க்கும்போது உங்களுக்கு தெரியும். அவர் ஒரு நாளைக்கு திட்டமிட்டபடி அனைத்து காட்சிகளையும் தெளிவாக படமாக்குவார். ஒரு நாளைக்கு 65 ஷாட்களை படமாக்கியிருக்கிறோம். எந்த இடத்திலும் எதற்கும் சமரசம் செய்யாமல் இயக்குநரும், இவரும் திட்டமிட்டு படப்பிடிப்பை நடத்தினர். இதற்கு படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் நடிகைகளும் முழு ஒத்துழைப்பையும் அளித்தனர்.


இந்தத் திரைப்படத்தில் மூத்த அரசியல்வாதியான பழ கருப்பையா அவர்களுடன் இணைந்து நடித்திருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் போது அவருடன் பேசும் போது பல விசயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் குறிப்பாக ''சினிமாவில் நம்பர் ஒன்.. நம்பர் டூ என்பது இருந்து கொண்டே இருக்கும். பத்து அல்லது இருபது ஆண்டுகளுக்கு ஒரு முறை நடிகர்கள்தான் மாறுவார்கள்.‌ அது நிலைத்த புகழ் அல்ல. நிலைத்த புகழ் என்பது... யார் ஒருவர் ஈகை, தியாகம் , வீரம், அன்பு.. இருக்கிறதோ அவர்தான் நடித்த புகழை பெறுவார்'' என சொன்னார். அது உண்மைதான். அவர் சொன்னதை தினமும் நான் ஒரு முறை நினைத்துப் பார்க்கிறேன். என்னால் முடிந்த சிறிய சிறிய உதவிகளை செய்து கொண்டுதான் இருக்கிறேன். 


இந்தப் படத்திற்கு கேபிள் சங்கரின் பங்களிப்பும் மகத்தானது. இந்தப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின் போது போனில் தொடர்பு கொண்டு 'அயோத்தி' படத்தில் உங்களுடைய கதாபாத்திரம் பேசப்படுகிறது. அதற்கு பெரும் வரவேற்பு இருக்கிறது' என பாராட்டினார். அப்போது அவரிடம், 'நான் இன்று ஒரு படப்பிடிப்பில் இருக்கிறேன். இந்த படமும் சிறப்பாக வரும்' என்று நம்பிக்கையுடன் சொன்னேன்.‌ படத்திற்கு  டப்பிங் செய்யும் போது ஒரு கேரக்டருக்காக கேபிள் சங்கர் பின்னணி பேச வந்தார். படத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து, தனஞ்ஜெயனை அழைத்து வந்தார்.  அவர் வந்த பிறகு இந்தப் படத்திற்கான முகவரியே மாறிவிட்டது.


நானும் இயக்குநர் மணி வர்மனும் இணைந்து இதற்கு முன் 'கண்மணி பாப்பா' எனும் படத்தினை உருவாக்கினோம். அந்த திரைப்படம் நன்றாக தான் இருந்தது. ஆனால் வெளியீடு சரியான தருணத்தில் அமையாததால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. 


இந்தப் படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்தவுடன் தனஞ்ஜெயன், ''இந்த படத்தை நான் வெளியிடுகிறேன்.  ஆனால் சில சிறிய திருத்தங்களை செய்ய ஒப்புக் கொள்ள வேண்டும்'' என்றார்.  இதனையும் அவர் ஒரு ஆலோசனையாக தான் சொன்னார். படத்தின் டைட்டில் முதல் கொண்டு சில திருத்தங்களை அவர் சொன்னதை ஏற்றுக் கொண்டோம். சின்ன சின்ன விசயங்கள் ஒரு படத்தினை மாற்றிவிடும் என்பதை உணர்ந்தோம்.‌ இந்த திரைப்படத்தை மக்களை சென்றடைய வைப்பதற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சி.. எங்களுக்கு ஒரு பாடமாக அமைந்தது. அவரிடமிருந்து நிறைய விசயங்களை கற்றுக் கொண்டோம்.  '' என்றார்.


*தயாரிப்பாளர் சி. வி. குமார்* பேசுகையில், '' ஹீரோ தமன் குமாரும், டைரக்டர் மணியும் இணைந்து நான்கு ஐந்து வருடங்களுக்கு முன் 'கண்மணி பாப்பா' என்ற படத்தினை வழங்கினர். அந்தப் படமும் சிறந்த படம் தான். அந்தப் படம் சரியான நபரின் கையில் கிடைக்காததால் வெளியீடு சிறப்பாக இல்லை. அதனால் வெற்றியும் கிடைக்கவில்லை. ஒரு நொடி எனும் இந்தத் திரைப்படம் நன்றாக வந்திருக்கிறது என கேள்விப்பட்டேன். இந்த திரைப்படம் தனஞ்ஜெயனின் கைகளுக்கு கிடைத்திருக்கிறது. அவர் இந்த திரைப்படத்தை சிறப்பான முறையில் வெற்றி பெற செய்வார். படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.'' என்றார்.



*நடிகர் ஆரி அர்ஜுனன்* பேசுகையில், '' இந்தப் படக் குழுவினருக்கு இதுவரை தெரியாத ஒரு விசயத்தை பகிர்ந்து கொள்கிறேன். இப்போதுதான் ட்விட்டரை பார்த்தேன். 'அரண்மனை 4' படத்தின் வெளியீடு மே மூன்றாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஒரு நொடி படத்திற்கு போட்டியில்லை. உங்களுக்கு விஷால் நடித்திருக்கும் 'ரத்னம்' படம் மட்டும் தான் போட்டி.


படத்தைப் பற்றி அனைவரும் அனைத்து விசயங்களையும் பேசி விட்டனர். நாளைக்கு தேர்தல் என்பதால்.. பேச்சாளர் பழ. கருப்பையா பேசும்போது, 'இங்கு கரப்சனும் இருக்கும். அடாவடித்தனமும் இருக்கும். எதுவும் மாறாது' என்பதை சொல்லியிருக்கிறார். ஆனால் ஓட்டு போடும் நமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை மாற்றம் ஏற்படும் என்பது தான். ஓட்டு போட்டால் மாற்றம் வரும் என்று நம்பி தான் ஓட்டு போடுகிறோம்.


சி. வி. குமார் தனஞ்ஜெயன் என தமிழ் சினிமாவின் ட்ரென்ட் செட்டர்ஸ் இங்கு வருகை தந்திருக்கிறார்கள். நான் சினிமாவில் நுழைந்து போராடிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் நான் பார்த்து வியந்த சில தயாரிப்பாளர்களில் இவர்களும் உண்டு. குறிப்பாக இவர்கள் நல்ல படைப்புகளை உருவாக்கி திரையரங்கத்திற்கு கொண்டு செல்லும் தயாரிப்பாளர்கள். இவர்களுடைய நிறுவனத்திலிருந்து அழைப்பு வராதா..? என ஏங்கி இருக்கிறேன்.


என்னைவிட.. சினிமா கனவுகளுடன் கடுமையாக உழைத்து சிறந்த படைப்பை உருவாக்கும் கலைஞர்களை தேடி கண்டறிந்து, அவர்களுக்கு வாய்ப்பளித்து படத்தை உருவாக்கி திரையரங்கத்திற்கு கொண்டு வரும் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதே.. இதற்கு மிகப்பெரிய பாராட்டை அளிக்க வேண்டும்.


தமன்- ஈரோடு மகேஷ்- நான் நெருங்கிய நண்பர்கள். இருந்தாலும் ஒரு கதாநாயகனின் வெற்றி என்பது ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் பெரிய போராட்டத்தை போன்றது. ஏனெனில் நடிகர்கள் உடம்பை எப்போதும் தயாராக வைத்திருக்க வேண்டும். சாப்பிட வேண்டும். வாய்ப்புகளை தேடி ஓட வேண்டும். நல்ல படைப்புகள் வெளியாக வேண்டும். எனக்கும்.. தமனுக்கும்.. எங்களைப் போன்றவர்களுக்கும்  என்ன பிரச்சனை என்றால்... கடைசி நிமிடம் வரை வேலை செய்ய வேண்டிய சூழல் உண்டு.‌ படத்தின் போஸ்டர் ஒட்டும் வேலையை கூட தயாரிப்பாளர், இயக்குநர் என அனைவரும் செய்வார்கள். ஆனால் நாயகன் என்பவர் திரையரங்கில் படம் ஓடும் கடைசி நாள் வரை வேலை செய்து கொண்டிருப்பார்.


தமிழ் சினிமாவில் ஏற்கனவே படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு சில சிக்கல்கள் இருக்கும். ஏனெனில் சினிமா பணம் போட்டு பணம் எடுக்கும் பிசினஸ். ஆனால் புதிய தயாரிப்பாளர்கள் நம்பிக்கையுடனும், கனவுகளுடனும் இங்கு படத்தை தயாரிக்க தொடங்குகிறார்கள்.  குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு இல்லை என்றாலும்.. படத்தை தயாரிக்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் தயாரிப்பாளர்கள் பலர் இருக்கிறார்கள். அந்த வரிசையில் வந்தவர்தான் தயாரிப்பாளர் அழகர்.  இவர் மனது வைத்ததால் தான் ஒரு நொடி தயாராகி இருக்கிறது. நல்ல சினிமாவாக தயாராகி தனஞ்ஜெயன் கைகளுக்கு வந்திருக்கிறது.  நிறைய நபர்களின் கனவுகளை நனவாக்க க்கூடிய இந்த தயாரிப்பாளர் போன்றவர்கள் தான் சினிமாவுக்கு தேவை.


'சின்ன பட்ஜெட்டில் படம் எடுக்காதீர்கள்' என்று விஷால் நல்ல நோக்கத்தில் தான் சொன்னார். ஆனால் பலரும் அதனை வேறு விதமாக புரிந்து கொண்டார்கள். ஆனால் ஒரு விசயத்தை புரிந்து கொள்ளுங்கள். சின்ன பட்ஜெட் படம் ...பெரிய பட்ஜெட் படம்.. என்றில்லை.

நல்ல கன்டென்ட் உள்ள படத்திற்கு மக்கள் எப்போது ஆதரவு தர தயாராகவே இருக்கிறார்கள்.


'மஞ்சுமல் பாய்ஸ்', 'காந்தாரா' போன்ற படங்கள் பெரிய வசூலை தமிழில் பெற்றிருக்கிறது. நிறைய நல்ல படங்கள் இங்கு ஓடுவதற்கு மிக முக்கியமான காரணம் நல்ல கன்டென்ட் தான். நல்ல கதை... நல்ல திரைக்கதை... நேர்மையான உழைப்பு... இவையெல்லாம் ஒன்றிணைந்தால்.. அதுதான் ரசிகர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம்.


இப்படத்தின் இயக்குநர் மணிவர்மன்.. இயக்கிய 'கண்மணி பாப்பா' படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது தான் அறிமுகமானார். அதன் பிறகு எங்களுக்குள் நல்ல நட்பு தொடர்கிறது. அவர் படப்பிடிப்பின் போது செலவுகளை திட்டமிட்டு தான் செலவு செய்வார். தயாரிப்பாளரின் பணம் என்றாலும் கூட அதனை தன்னுடைய சொந்த பணமாக நினைத்து தான் சிக்கனமாக செலவு செய்வார். அவரின் இந்த அணுகுமுறை என்னை மிகவும் கவர்ந்தது.  ஒரு நொடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு தயாரிப்பாளர்கள் விரும்பும் தரமான இயக்குநர் கிடைத்திருக்கிறார் என மகிழ்ச்சி அடைகிறேன்.  அவரை வாழ்த்துகிறேன். புதிய தயாரிப்பாளர்கள் அவரை நம்பி முதலீடு செய்து படத்தை தயாரிக்கலாம். உங்கள் பணத்திற்கு அவர் பாதுகாப்பாக இருப்பார். 


இந்த படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் அனைவரும் பணத்தை எதிர்பார்த்து பணியாற்றவில்லை. இப்படத்தின் கதைதான் அனைவரையும் ஒன்றிணைந்து, எதையும் எதிர்பார்க்காமல் பணியாற்ற வைத்து. இந்த படம் வெளியான பிறகு ஹீரோ தமன் குமார் உள்ளிட்ட அனைவருக்கும் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என நம்புகிறேன்.


இந்த படத்தின் வணிகத்திற்கும், வெளியீட்டிற்கும் கேபிள் சங்கரும் ஒரு காரணம். இந்த விழா முடிவடைந்த பிறகு அவரை சந்தித்து, எங்களது  படத்தைப் பார்த்து ஆதரவு தருமாறும் வணிகத்திற்கு வழிகாட்டுமாறும் ஏராளமானவர்கள் தொடர்பு கொள்வார்கள்.


'தங்கலான்', 'கங்குவா' என பெரிய பட்ஜெட் படங்களுக்கு பணியாற்றி வரும் தனஞ்ஜெயன் எப்போதும் பரபரப்பாகவே இருக்கிறார். இது மட்டும் இல்லாமல் திரையுலகில் ஏதேனும் பிரச்சனை என்றால் உடனடியாக அது பற்றிய தனது எண்ணங்களை டிவீட் செய்கிறார்.


தனஞ்ஜெயன் மீது திரையுலகினருக்கு குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு பெரிய மரியாதை இருக்கிறது. ஏனெனில் அவரிடம் உள்ள ஃபினான்சியல் டிசிப்ளின். 


ஒரு நொடி படத்திற்காக தனஞ்ஜெயன் அனைவரையும் பணிவுடன் அணுகி படத்தைப் பற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுமாறும், அதை வீடியோவாக வெளியிடுமாறும் கேட்டுக் கொண்டார்.


இது தொடர்பாக என்னை அணுகும் போது நான் செய்த தவறை அது சுட்டிக்காட்டி இருந்தேன். நான் முதன் முதலாக வாக்களிக்க சென்று இரண்டு மணி நேரத்திற்கு மேலாக வரிசையில் நின்று அதற்கு மேல் பொறுமை இல்லாமல் வாக்களிக்காமல் திரும்பி வந்த விசயத்தை பகிர்ந்து கொண்டேன்.  காலப்போக்கில் நான் செய்த தவறை உணர்ந்தேன்.  ஓட்டு போடுவது நமக்காக. நாம் யாரையோ தேர்வு செய்கிறோம் என்பதற்காக அல்ல. நமக்காகத்தான் ஒருவரை தேர்வு செய்கிறோம் என்ற பொறுப்புணர்வை வீடியோவாக பதிவு செய்து அனுப்பினேன். இதற்கும் ஒரு காரணம் உண்டு. இதற்கும் இப்படத்தில் கிளைமாக்ஸிக்கும் ஒரு தொடர்பு உண்டு.


நாம் நமது தவறுகளை எப்போது ஒப்புக்கொள்கிறோம்.... நாம் செய்யும் தவறுகளை எப்போது திருத்திக் கொள்கிறோம்... என்பது மிகவும் முக்கியமானது. தவறு என்று தெரிந்த பிறகு அதனை திருத்திக் கொள்ளாமல் இருப்பது தான் தவறு. இதை உணர்த்தும் வகையில் இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது. இந்த திரைப்படம் மாற்றத்திற்கான ஒரு படம்.


அனைவரும் வெற்றியை நோக்கி தான் ஓடிக்கொண்டிருக்கிறோம். இந்த திரைப்படம் நல்ல கன்டென்ட் இருப்பதால் வெற்றி பெறும்.


மலையாள திரைப்படங்கள் வெற்றி பெறுகிறது. வேறு மொழி திரைப்படங்கள் வெற்றி பெறுகிறது. ஆனால் இதற்கு எல்லாம் முன்னோடி தமிழ் சினிமா தான். இங்குதான் சிறந்த கன்டென்ட்டிற்கு எப்போதும் ஆதரவு உண்டு.  தமிழ் சினிமாவில் அதற்கு தற்போது ஒரு தேக்க நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு காரணம் நாம் கதாசிரியர்களுடன் இணைந்து பணியாற்றுவதில்லை.


இங்கு இரண்டு எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் நடிக்க வந்து விட்டார்கள். எழுதுவதை குறைத்து கொண்டு விட்டார்கள்.  அதனால் இவரைப் போன்ற எழுத்தாளர்களை நாம் உருவாக்க வேண்டும். இதற்காக ரைட்டர்ஸ் மேளா என்ற ஒரு விசயத்தை தொடங்க வேண்டும். எழுத்தாளரிடம் கதையை வாங்கி படத்தை தயாரிக்கும் போக்கு நம்மிடம் குறைந்து வருகிறது. இயக்குநர் கதையை கொண்டு வந்தால் அதனை ஏற்றுக் கொள்கிறோமே தவிர.. ஒரு எழுத்தாளிடமிருந்து கதையை வாங்கி அதை இயக்குவதற்கு மற்றொரு இயக்குநரை நாம் தேர்ந்தெடுப்பதில்லை.   எழுத்தாளர்களையும், இயக்குநர்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியை தொடங்க வேண்டும் என்று நானும் எண்ணி கொண்டிருக்கிறேன். இதற்கான தொடக்கமாக இந்த மேடை அமையும் என நான் நம்புகிறேன். '' என்றார்.



*படத்தை வெளியிடும் தயாரிப்பாளரும், விநியோஸ்தருமான தனஞ்செயன்* பேசுகையில், '' நம்பிக்கை வைத்து மீனாட்சி அம்மனின் அருளுடன் இந்த படத்தை தயாரித்திருக்கும் தயாரிப்பாளர் அழகருக்கு நன்றி. உங்களுக்கு மாபெரும் வெற்றி காத்திருக்கிறது.  நல்ல திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறீர்கள். இந்தப் படத்தின் மீது நம்பிக்கை வைத்து இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றி, கடுமையாக உழைத்திருக்கும் ஒளிப்பதிவாளர் ரத்தீசுக்கும் நன்றி.


இந்தப் படத்தை கேபிள் சங்கர் மூலமாக எங்கள் குழுவினருடன் இணைந்து பார்த்தேன் பார்க்கும்போது எனக்கு தோன்றிய கருத்துக்களை எழுதி கொண்டே வந்தேன். படம் முடிவடைந்த பிறகு இயக்குநரிடம் பேசினேன். அவர் பல இயக்குநர்களுக்கு உரிய பிடிவாத போக்கை கைவிட்டு.. புரிந்து கொள்ளும் கலாச்சாரத்தை கொண்டிருந்தார்.‌ இது எனக்கு மிகவும் பிடித்து விட்டது.  படத்தின் டைட்டில் முதலில் 'நொடி' என்று இருந்தது.‌ இதனை 'ஒரு நொடி' என மாற்ற வேண்டும் என கேட்டேன். சற்றும் தயக்கம் இல்லாமல் ஒப்புக்கொண்டார்.  அந்த நொடியிலேயே இவருடன் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என தீர்மானித்து விட்டேன்.  இந்த படத்திற்கான டைட்டில் மாற்றத்தை கதையின் கான்செப்ட் உடன் ஒத்திருந்ததால் இதை சொன்னவுடன் எந்த தயக்கமும் இன்றி அவர் ஏற்றுக்கொண்டார். அப்போது இந்த படம் தணிக்கை செய்யப்படவில்லை. அதனால் எனக்கு வாய்ப்பு இருந்தது. இதன் பிறகு தயாரிப்பாளர் சங்கத்தை அணுகி படத்தின் பெயர் மாற்றத்திற்கு அனுமதி வாங்கினோம்.


நான் எளிதில் திருப்தி அடைய மாட்டேன். சிறிய சிறிய மாற்றங்களை செய்ய வேண்டும் என சொல்லிக் கொண்டே இருப்பேன். டப்பிங்... வசனம்... காட்சி அமைப்பு... என பல விசயங்களில் திருத்தங்களை செய்யலாமே என சொல்லிக் கொண்டே இருந்தேன். படைப்பு எங்களிடம் இருக்கும் வரை மாற்றங்கள் செய்து கொண்டே இருக்கலாம்.  அவை வெளியான பிறகு ரசிகர்களும், ஊடகங்களும் சொல்லும் விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்.


படத்தின் நீளத்தை குறைக்கலாம் என்று சொன்னேன். குறிப்பாக எட்டு நிமிட காட்சிகளை வெட்டி விடலாம் என சொன்னேன். அதற்கும் இயக்குநர் சரி என்று ஒப்புக்கொண்டார். உடனே இயக்குநர், படத்தொகுப்பாளர் இணைந்து எந்தெந்த காட்சிகளை நீக்கலாம் என தீர்மானித்து, படத்தின் நீளத்தை குறைத்து திரைக்கதையை வேகப்படுத்தினர். அவர்களுடைய கூட்டு உழைப்பு எனக்கு பிடித்திருந்தது.


படத்தின் இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம். ஒரு இளம் திறமைசாலி. அற்புதமாக பணியாற்றி இருக்கிறார்.


இயக்குநர் மணிவர்மனிடம் கடைசியாக ஒரு திருத்தத்தை சொன்னேன். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். அது கதையின் போக்கையே மாற்றிவிடும் என்பதை அவர் விளக்கிய பிறகு.. நானும் உணர்ந்தேன். இது அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்ட பாடம்.


படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்த பிறகு, அவரிடம் எனது நிறுவனத்தில் ஒரு படத்தை இயக்குங்கள் என கேட்ட போது, அவர் மற்றொரு நிறுவனத்திற்காக ஒப்பந்தமாகி இருக்கிறேன் என்றார். அத்துடன் அந்த தயாரிப்பாளரை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். தமன் தான் நாயகன். நாங்கள் இப்படத்தில் தொடக்கத்திலிருந்தே உங்களுடன் இணைந்து பயணிக்கிறோம் என்றார் இதுவும் என்னை மிகவும் கவர்ந்தது.


இந்தப் படத்தை ஒரு குறும்படமாக காண்பிக்க வேண்டும் என சொன்னேன். உடனே படத்தொகுப்பாளரும், இயக்குநரும் இணைந்து 13 நிமிட காட்சிகளை உருவாக்கி இந்தப் படம் எதைப் பற்றி பேசுகிறது என்பதனை தொகுத்து காண்பித்தார்கள்.


ஒரு தயாரிப்பாளர் -விநியோகஸ்தர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் இயக்குநர் மணிவர்மன் போன்றவர்களுடன் தொடர்ந்து பயணிக்க விரும்புகிறேன். மணிவர்மன் போன்றவர்கள் திரையுலகில் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.‌


ஏப்ரல் 26 ஆம் தேதி இப்படத்தை வெளியிட திட்டமிட்டோம். கோடை விடுமுறை தொடங்கியதால் இந்த தேதி சிறப்பானது என கருதி வெளியிடுவதற்காக திரையரங்குகளை தொடர்பு கொண்டோம். அவர்கள் 'அரண்மனை 4', 'ரத்னம்' என இரண்டு பெரிய திரைப்படங்கள் அன்றைய தேதியில் வெளியாகிறது என சொன்னார்கள். ஆனால் இப்போது நடிகர் ஆரி சொன்ன தகவலால் உற்சாகமடைந்திருக்கிறேன். 'அரண்மனை 4' படத்தின் வெளியீட்டு தேதி தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. அதனால் ஒரு நொடி படத்திற்கு கூடுதலான திரையரங்குகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.


ஆரியின் பேச்சை கவனித்தபோது அவர் எதிர்காலத்தில் சிறந்த அரசியல்வாதியாக வருவார் என எதிர்பார்க்கிறேன். அவருடைய பேச்சில் .. தேர்தல் ஆணையத்திற்கு அவர் வழங்கிய ஆலோசனை.. மிகவும் சிறப்பானது.  அவரது ஆலோசனையை ஏற்று வாக்களித்ததற்கான டிஜிட்டல் சான்றிதழ் உடனடியாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டால் பெரும் மாற்றம் ஏற்படும். இதற்காக ஆரியை மனமார வாழ்த்துகிறேன். அதிலும் மாற்றத்திற்காக அவர் கொடுக்கும் குரல்‌ பெரிய அளவில் பேசப்படும்.‌ தனி மனிதனாக இந்த சமூகத்தில் மேலும் பல உயரங்களை தொடுவீர்கள் என வாழ்த்துகிறேன். '' என்றார்.


*பேச்சாளர் ஈரோடு மகேஷ்* பேசுகையில், ''  'ஒரு நொடி' இந்த பட குழுவினருக்கு இந்த படம் எவ்வளவு முக்கியமோ... அந்த அளவிற்கு என்னுடைய நண்பன் தமனுக்கும் இந்த படம் முக்கியம். ஒரு மனிதன் ஒரு வெற்றிக்காக ஒரு மாதம் உழைக்கலாம். ஓராண்டு உழைக்கலாம். ஈராண்டு உழைக்கலாம். ஆனால் பன்னிரண்டு ஆண்டு காலம் உழைத்திருக்கிறார். ஒரு வெற்றிக்காக தன்னுடைய வாழ்க்கையில் பன்னிரண்டு ஆண்டுகளை தியாகம் செய்தவர் என்னுடைய நண்பர் தமன் குமார். எல்லாம் வல்ல இறைவனின் ஆசியால் இந்த திரைப்படம் வெற்றியடைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.


நான் மிகவும் நேசிக்கும் இலக்கிய ஆளுமைகள் வேல. ராமமூர்த்தி மற்றும் பழ. கருப்பையா ஆகியோர் இங்கு வருகை தந்திருக்கிறார்கள்.  இவர்களின் எழுத்துக்களை வாசித்திருக்கிறேன். பழ கருப்பையா பேசும் போது, 'இங்கு எதுவும் மாறாது' எனக் குறிப்பிட்டார். உண்மைதான்.  உதாரணத்திற்கு டிராபிக்.


ஐயா சொன்னது போல் தப்பு செய்பவர்கள் அடாவடியாகத்தான் இருக்கிறார்கள்.  தப்பு செய்பவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்கள். கை கொடுக்கிறார்கள். கட்டிப்பிடிக்கிறார்கள். தெளிவாக இருக்கிறார்கள்.


கோர்ட்டில் கேஸ் ஒன்று வருகிறது. ஏடிஎம்மில் ஒருவன் ஐந்து முறை கொள்ளையடித்திருக்கிறான். அவரைப் பார்த்து ஜட்ஜ், 'ஏடிஎம்மில் ஐந்து முறை கொள்ளையடித்திருக்கிறாயே.. இதற்கு என்ன தண்டனை தெரியுமா?'' என கேட்டிருக்கிறார். அதற்கு அவன், ':ஐந்து ட்ரான்ஸாக்ஷன்களுக்கு மேல் சென்றால் 150 ரூபாய் பிடிப்பீர்களா..?! '' என பதிலுக்கு கேட்டிருக்கிறார். 


வட இந்தியாவில் பதினைந்து நாளில் ஏடிஎம்மில் கொள்ளை அடிப்பது எப்படி ?என்று கிராஷ் கோர்ஸ் ஒன்றை நடத்தியிருக்கிறான். கடைசியில் செய்முறை பயிற்சியின் போது அவனை கைது செய்திருக்கிறார்கள்.


இதெல்லாம் நாளிதழில் வெளியான உண்மைச் சம்பவங்கள். இப்படித்தான் இருக்கிறது உலகம். இதற்கு நடுவில் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு நொடி முக்கியம்.


ஜெயகாந்தன் சொல்வார் 'வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயம்' என்பார்.


ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு நொடி முக்கியம். கொலை செய்கிறவனுக்கு கொலை செய்வது நியாயமாகப்படும். கொள்ளையடிக்கிற உனக்கு அந்த நொடியில் கொள்ளை அடிப்பது நியாயமாகப்படும். இருந்தாலும் உண்மையான நியாயம் என்று ஒன்று இருக்கிறது அல்லவா... அதுதான் இந்த படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.


இங்கு உள்ள அனைத்து நட்சத்திரங்களுக்கும் அவர்களது குடும்பத்தினர் செய்த தியாகங்கள் கொஞ்சநஞ்சமல்ல. இறையருள் காரணமாக இந்த திரைப்படத்தின் மிகப்பெரிய ஆளுமைகள் நடித்திருக்கிறார்கள். இறையருளால் தயாரிப்பாளர் அழகர் இந்த திரைப்படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டார். இறையருளால் தனஞ்ஜெயன் இந்த திரைப்படத்தை வாங்கி வெளியிடுகிறார். இறையருளாலும், ரசிகர்களின் ஆதரவாலும் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். '' என்றார்.

Thursday 18 April 2024

’வல்லவன் வகுத்ததடா’ திரைப்பட விமர்சனம்


Casting : Tej Charanraj, Rajesh Balachandiran, Aananya Mani, Swathi Meenakshi, Regin Rose

Directed By : Vinayek Durai

Music By : Sagishna Xavier

Produced By : Vinayek Durai

 

“நல்லது செய்தால் நல்லது நடக்கும்” என்ற விசயத்தை கருவாக வைத்துக்கொண்டு, 6 கதாபாத்திரங்களை சுற்றி நடக்கும் கதையை ஹைபர் லிங்க் பாணியில் சொல்வது தான் ‘வல்லவன் வகுத்ததடா’.

 

என்ன செய்தாலும் பரவாயில்லை, எப்படிப்பட்ட தவறுகள் செய்தாலும் பராவயில்லை பணம் தான் முக்கியம் என்று பயணிக்கும் ஐந்து பேர் பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருக்கிறார்கள். ஆனால், மற்றவர்களுக்கு உதவி செய்வதோடு, நேர்மையாக வாழ வேண்டும் என்று நினைக்கும் ஒருவர் வாழ்க்கையில் அனைத்தையும் இழந்ததோடு, மேலும் மேலும் துன்பப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறார்.

 

இந்த ஆறு பேரும் ஒருவருக்கொருவர் தொடர்பில்லாதவர்கள் என்றாலும் பணம் இவர்களுக்கிடையே தொடர்பை ஏற்படுத்துகிறது. அதனால் இவர்களின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதை, விறுவிறுப்பாக மட்டும் இன்றி, படம் பார்ப்பவர்களின் முழு கவனத்தையும் இரண்டு மணிநேரத்திற்கு ஆட்கொள்ளும் வகையில் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விநாயக் துரை.

 

தேஜ் சரண்ராஜ், ராஜேஷ் பாலச்சந்திரன், அனன்யா மணி, சுவாதி மீனாட்சி, விக்ரம் ஆதித்யா, ரெஜின் ரோஸ் ஆகியோர் ஒரு சில திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தாலும், முதல் முறையாக முதன்மை வேடத்தில் நடித்திருக்கிறார்கள். 

 

அனைவரும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். அதிலும், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ராஜேஷ் பாலச்சந்திரன் தனி மேனரிசத்தோடு நடித்து அதிகம் கவனம் பெறுகிறார். 

 

ஒளிப்பதிவாளர் கார்த்திக் நல்லமுத்து தயாரிப்பாளரின் நிலை அறிந்து, குறிப்பிட்ட ஒரு வட்டத்திற்குள் தனது கேமராவை பயணிக்க வைத்திருந்தாலும், கதைக்கு ஏற்ப தனது பணியை சிறப்பாகவே செய்திருக்கிறார்.

 

இசையமைப்பாளர் சகிஷ்னா சேவியருக்கு மெட்டமைக்க வாய்ப்பில்லை என்றாலும், காட்சிகளுக்கு உயிரோட்டம் அளிக்கும் வகையில் பின்னணி இசையை கொடுத்து படத்திற்கு கைகொடுத்திருக்கிறார்.

 

ஆறு கதாபாத்திரங்களை சுற்றி சுற்றி வரும் கதையை எவ்வித குழப்பமும் இன்றி ரசிகர்களிடம் கடத்தியிருக்கும் படத்தொகுப்பாளர் அஜயின் பணி நேர்த்தி.

 

எழுதி இயக்கியிருப்பதோடு தயாரிக்கவும் செய்திருக்கும்  விநாயக் துரை, பிரமாண்டமான முறையில் சொல்லக்கூடிய திரைக்கதையாக இருந்தாலும், அதை சிறு பட்ஜெட்டில் எடுக்கும் முயற்சியில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறார்.

 

”நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் ஆனா கை விட மாட்டான், கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான் ஆனா கை விட்டுருவான்” என்ற வாக்கியத்தை வைத்துக்கொண்டு இயக்குநர் விநாயக் துரை, அமைத்திருக்கும் சுவாரஸ்யமான திரைக்கதை மற்றும் அதை ஹைபர் லிங்க் முறையில் சொன்ன விதம் படத்தை ரசிக்க வைக்கிறது.

 

அதே சமயம், சில காட்சிகள் யூகிக்கும்படி இருக்கிறது. குறிப்பாக பணத்திற்காக கஷ்ட்டப்படும் நாயகிக்கு பணம் எந்த வகையில் கிடைக்கும், என்பதை எளிதில் யூகிக்க முடிகிறது. இதுபோன்ற சில சிறு குறைகள் இருந்தாலும், முழு படமாக அனைத்து தரப்பு ரசிகர்களையும் முழுமையாக  திருப்திப்படுத்தியிருக்கும் இயக்குநர் விநாயக் துரை, எளிமையான ஒரு விசயத்தை திரை மொழியில் சுவாரஸ்யமாக கொடுப்பதில் கெட்டிக்காரர் என்பதை நிரூபித்திருக்கிறார்.

 

மொத்தத்தில், இந்த ‘வல்லவன் வகுத்ததடா’ சூப்பர் 



Rating 3/5 

Wednesday 17 April 2024

அக்கரன் திரைப்பட இசை வெளியீட்டு விழா


குன்றம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர்  அருண் K பிரசாத் இயக்கத்தில், எம் எஸ் பாஸ்கர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க,  மாறுபட்ட களத்தில் வித்தியாசமான திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் "அக்கரன்".  விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 



இந்நிகழ்வினில்


நடிகர் எம் எஸ் பாஸ்கர் பேசியதாவது.. 

இப்படத்தைத் தயாரித்திருக்கும்  கார்த்திகேயனுக்கும் மற்றும் படக்குழுவினருக்கும் என் வாழ்த்துக்கள்.   ஹரி இசையில் பாடல்கள் அட்டகாசமாக இருக்கிறது. சரவெடி சரவணன் மாஸ்டர் ரொம்ப ஈஸியாக சொல்லிக்கொடுத்து ஆக்சன் காட்சிகளை எடுத்து விடுவார் ஆக்சன் காட்சிகள் நன்றாக வந்துள்ளது. இந்தப்படத்திற்கு என் அக்கா மகன் மது வந்து, என் நண்பர் அருண் ஒரு படம் செய்கிறார் நீங்க தான் லீட் கேரக்டர் செய்யனும் என்றார். சரிப்பா கதை கேட்கிறேன் என்றேன். பார்க்கிங் மாதிரி நாயகனுக்கும் எனக்குமான கதையாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் கதை படு வில்லங்கமாக இருந்தது. இயக்குநரிடம் வேறு ஹீரோ நடிக்கலாமே என்றேன், ஆனால் அந்த வயது, நடிப்புக்கு நீங்கள் தான் சரியாக இருப்பீர்கள் எனச் சொல்லிச் சம்மதிக்க வைத்தார். எல்லோருடைய முயற்சியால், மிக அழகாகக் கோர்த்து, இந்தப்படத்தை எடுத்துள்ளார்கள். மகள்கள் என்றாலே நான் உருகிவிடுவேன், வெண்பாவும், பிரியதர்ஷினியும்  என் மகள்களாக அருமையாக நடித்துள்ளார்கள். ஷூட்டிங் ரொம்ப ஜாலியாக, மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. மண் புழு கூட மிதித்தால் திரும்பக் கடிக்க வரும் அது போல் பாதிக்கப்பட்ட ஒரு முதியவரின் கதை என்றார் இயக்குநர், அந்த வாக்கியம் எனக்கு மிகவும் பிடித்தது. படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் நல்ல படம் ஆதரவு தாருங்கள் நன்றி. 


 தயாரிப்பாளர் கார்த்திகேயன் பேசியதாவது.. 

நான் சினிமாவிற்கு மிகவும் புதிது. என் நண்பர்கள் மூலம் தான் இந்த கதை வந்தது. எனக்கு சினிமா செய்யும் ஐடியா எதுவும் இல்லை. கார்த்திக்,கருப்பசாமி எனத்  திருப்பரங்குன்றம் நண்பர்கள் இணைந்து எல்லோரும் பேசினோம் உடனே குன்றம் புரடக்சன்ஸ் எனப் பெயர் வைத்தோம். படத்தில் உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள். படம் நன்றாக வந்துள்ளது படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி. 


ஷிவானி பிலிம்ஸ் சார்பில் செந்தில் பேசியதாவது.. 

சினிமா எடுப்பது ஈஸி, ரிலீஸ் செய்வது கஷ்டம் என்பார்கள், ஆனால்  ஒரு படத்தைக் கஷ்டப்பட்டு எடுத்தால் கண்டிப்பாக ஈஸியாக ரிலீஸ் செய்யலாம். அக்கரன் அந்த மாதிரியான ஒரு நல்ல படம். அதை ஷிவானி சினிமாஸ் சார்பில் வெளியிடுவது மகிழ்ச்சி. நன்றி.


இயக்குநர் அருண் K பிரசாத் பேசியதாவது.. 

நண்பர் கருப்பசாமி மூலமாகத் தான் எம் எஸ் பாஸ்கரைத் தெரியும், அவர் பெயர் சொன்னவுடனே தயாரிப்பாளர் ஆபிஸ் போட்டுத் தந்து விட்டார்.  இருவருக்கும் நன்றிகள்  இப்படத்தில் கேமராமேன்  ஆனந்த் மிகப்பெரிய உறுதுணையாக இருந்தார். படத்தில் எம் எஸ் பாஸ்கர் அப்பா அட்டகாசமாக நடித்துள்ளார், இப்படம் புதுமையாக இருக்கும். இப்படத்தில் உழைத்துள்ள அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 


இசையமைப்பாளர் ஹரி பேசியதாவது.. 

எங்களை ஆதரித்துப் பாராட்ட வந்திருக்கும் அனைவருக்கும் என் நன்றிகள். எம் எஸ் பாஸ்கர் மாதிரி ஆளுமையின் படத்தில் வேலை பார்த்தது மகிழ்ச்சி. கார்த்திகேயன் சார், கருப்புசாமி சார், இயக்குநர் என எல்லோருக்கும் நன்றிகள். அக்கரன் படத்தில் எங்களுக்குச் சவாலாக இருந்தது. எம் எஸ் பாஸ்கர் சாருக்கு டைட்டில் சாங் செய்தது தான். அதை முதன்முறையாகச் செய்தது நாங்கள் தான் என்பது பெருமை. எம் எஸ் பாஸ்கர் சார் இதுவரை பார்க்காத பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் என்னுடன் இசையில் பணிபுரிந்த கலைஞர்களுக்கு நன்றி. இப்படம் மிக நன்றாக வந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆதரவும் எங்களுக்குத் தேவை. அனைவருக்கும்  


தமிழ் சினிமாஸ்  கருப்பசாமி பேசியதாவது.. 

தடை எப்போதும் நம் கூடவே வரும் அதை உடைக்க பழகிக்கொண்டால் நம்மைக் கண்டு மிரளும். அது தான் வாழ்க்கையின் தொடக்கம். பல தடைகளைத் தாண்டி அக்கரன் இன்று திரைக்கு வந்துள்ளது. மகிழ்ச்சி. ஒரு படத்தை எடுக்கும் போது, ஸ்டாரை வைத்துப் படமெடுக்க வேண்டும் என நினைப்பார்கள் ஆனால் எங்களுக்கு நட்சத்திரமே கிடைத்துள்ளார். என்னை வைத்து முதலில் ஒரு படமெடுக்கத் தயாரிப்பாளர் முன் வந்தார் அப்போது உருவாக்கியது தான் தமிழ் சினிமாஸ் ஆனால் ஒரு ஆக்ஸிடெண்டில் தவறிவிட்டார், அவர் பெயர் தியாகராஜன் அவர் பெயர் நிலைக்க வேண்டும் என்று தான் அதை விநியோகத்தில் இன்று கொண்டு வந்துள்ளோம். நூறு எதிரிகள் இருந்தாலும் ஒரு நண்பன் இருந்தால் போதும் உலகை ஜெயிக்கலாம். ஒரு மிகச்சிறந்த படம் இது அதனால் தான் இதை எடுத்தோம். ஷிவானி சினிமாஸ் உடன் இணைந்து இப்படத்தை எடுத்துள்ளோம். கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். இப்படம் நன்றாக வந்துள்ளது அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி. 


நடிகை வெண்பா பேசியதாவது.. 

இந்தப் படம் எனக்கு மிக முக்கியமான படம்,  இந்த படத்தின் ஆடிசன் சென்றபோது, இயக்குநர் இந்த படத்தில் ஆக்சன் காட்சிகள் இருக்கிறது உங்களுக்கு ஓகே என்றால் எனக்கு ஒகே என்றார். எனக்குக் கதை மிகவும் பிடித்திருந்தது, நான் இதுவரை லவ், செண்டிமெண்ட் மாதிரியான படங்கள் மட்டுமே செய்து இருக்கிறேன். இந்தப் படம் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. தயாரிப்பாளர் கார்த்திகேயன் சார் சினிமா தனக்கு புதுசு என்றார், ஆனால் இந்த மாதிரியான கதையை எடுத்து, தயாரித்து, எங்கள் மாதிரியானவர்களுக்கு வாய்ப்பு தருவது பெரிய விஷயம் சார் நன்றி.  எம் எஸ் பாஸ்கர் சார் நடிப்பிற்கு எல்லோருமே ரசிகர்கள் தான் நானும் அதில் ஒருத்தி. அவருக்கு மகளாக நடிக்கிறேன் என்றபோது நெர்வஸாக இருந்தது, எங்களுடன் எளிமையாகப் பழகி அழகாகச் சொல்லித்தந்தார். அவருடன் நடித்த அனுபவம் மிக மகிழ்ச்சியாக இருந்தது. ஒளிப்பதிவு, எடிட்டிங்க், இசை எல்லாம் நன்றாக வந்துள்ளது. நல்ல படம்  அனைவரும் ஆதரவு தாருங்கள். 


நடிகை பிரியதர்ஷினி  பேசியதாவது.. 

ஜீவன் மணி எனும் இயக்குநர் என்னை வைத்து ஷார்ட் ஃபிலிம் எடுத்தார் அதன் மூலம் தான் இந்த வாய்ப்பு வந்ததது. தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள். படம் அட்டகாசமாக வந்திருக்கிறது. எல்லோரும் திரையரங்கில் பார்த்து படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.


நடிகர் ஆகாஷ் பிரேம்குமார் பேசியதாவது.. 

ஒளிப்பதிவாளர் ஆனந்த் அண்ணா மூலம் மூலமாகத் தான் இந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தது இதற்கு முன் பாலா சாரின் வர்மா படத்தில் நான் நடித்திருந்தேன் ஆனால் அந்த படம் தியேட்டரில் வெளியாகவில்லை, ஓடிடியில் தான் வெளியானது அதைப் பார்த்துவிட்டு இந்த பையனுக்கு ஒரு நல்ல வாய்ப்பை தர வேண்டும் என ஆனந்த் அண்ணா எனக்கு இந்த வாய்ப்பை வாங்கித் தந்தார். கதையை நம்பி ஒருமுயற்சியாக இந்தப்படத்தைச் சின்ன பட்ஜெட்டில் எல்லோரும் உழைத்து இப்படத்தை எடுத்துள்ளோம். இது போன்ற படத்தை தயாரிக்க முன்வந்த கார்த்திகேயன் சாருக்கு என் நன்றிகள், எம் எஸ் பாஸ்கர் சார் மாதிரி பெரிய நடிகர்கள் கூட நடிக்கும் போது தான், நாம் பயணிக்க வேண்டிய தூரம் தெரியும். அவரிடம் நிறையக் கற்றுக்கொண்டேன் நன்றி. உடன் நடித்த அனைவருக்கும் நன்றி. ஹரி மிகச்சிறந்த இசையைத் தந்துள்ளார்.  சின்ன பட்ஜெட்டில் உருவாகும் நல்ல படங்களை ஆதரிக்க வேண்டும். படம் பார்த்து உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள் நன்றி.   



நடிகர் விஸ்வநாத் பேசியதாவது  

அட்டகத்தி முதல் இப்போது வரை ஆதரவு தந்து வரும் அனைவருக்கும் என் நன்றிகள்.  ஒளிப்பதிவாளர் ஆனந்த் சார் மூலம் தான் எனக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் நிறைய பேருக்கு வாய்ப்பு வாங்கி தந்துள்ளது எனக்கு தெரிகிறது. நன்றி. எம் எஸ் பாஸ்கர் எந்தப்படத்தில் நடித்தாலும் அவர் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து விடுவார். அதே போல் உடன் நடிப்பவர்களுக்கு நல்ல ஸ்பேஸ் தருவார். கபாலி படத்தில் நடித்தபோது ரஜினி சார் உடன் நடிப்பவர்களை கூப்பிட்டு தனித்தனியாகப் பாராட்டுவார். அதே போல் எம் எஸ் பாஸ்கர் சாரும் எல்லோரையும் பாராட்டினார். உங்களுடன் நடித்தது மகிழ்ச்சி சார். இப்படத்தில் எல்லோருமே கடினமாக உழைத்துள்ளனர். ஹரி சார் மியூசிக்கில் பாடல்கள் நன்றாக வந்துள்ளது.  எல்லோருக்கும் நன்றி. 




நடிகர்கள்- எம்.எஸ். பாஸ்கர் / கபாலி விஸ்வந்த் / வெண்பா / ஆகாஷ் பிரேம்குமார் / நமோ நாராயணன் / பிரியதர்ஷினி அருணாச்சலம் / அன்னராஜ் கார்த்திகேயன் / கார்த்திக் சந்திரசேகர் / கண்ணன் / மஹிமா



தொழில்நுட்ப கலைஞர்கள் 

எழுத்து  இயக்கம் - அருண் K பிரசாத்

ஒளிப்பதிவு - எம்.ஏ.ஆனந்த்

ஸ்டண்ட்- சரவெடி சரவணன்

கலை இயக்குனர் - ஆனந்த் மணி

எடிட்டர்- பி.மணிகண்டன்

மக்கள் தொடர்பு - சதீஷ், சிவா (AIM)

தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்- K.முத்துக்குமார்

நிர்வாகத் தயாரிப்பாளர் - கருப்பசாமி காளிமுத்து

இணை தயாரிப்பு - R V K 

தயாரிப்பு - குன்றம் புரொடக்ஷன்ஸ்

ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரரை பயிற்சியாளராக நியமித்துள்ளது வேல்ஸ் ஃபுட்பால் கிளப்


வேல்ஸ் குழுமங்களில் நிறுவனத்தலைவர் டாக்டர். ஐசரி கே. கணேஷ் பன்முகம் திறமை கொண்டவர். கல்வி, திரைத்துறை, விளையாட்டு, சமூக சேவை எனப்பல தளங்களில் முன்னேற்றத்தை கொண்டு வர உழைத்து வருபவர். தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் மற்றும் இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு ஆகியவற்றின் தலைவராக உள்ள டாக்டர் ஐசரி.கே.கணேஷ், விளையாட்டு வீரர்களை கண்டறிந்து அவர்களின் திறமைகளை வளர்ப்பதற்காக தொடர்ந்து பயணித்து வருகிறார். 


இதன் ஒரு பகுதியாக டாக்டர் ஐசரி கே கணேஷின் சிந்தனையில் உருவானது தான் வேல்ஸ் கால்பந்து கிளப். இந்த கிளப் தமிழ்நாட்டில் கால்பந்து விளையாட்டை வளர்ப்பதற்காக தொடங்கப்பட்டது. தற்போது இந்த கிளப் கால்பந்து விளையாட்டு மீது ஆர்வம் கொண்டுள்ள பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக ஒரு முன்னோடி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.


இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வேல்ஸ் குழுமங்களின் நிறுவனத்தலைவர் டாக்டர். ஐசரி.கே கணேஷ்,"கிரிக்கெட் உலகின் முதன்மையான விளையாட்டு கிடையாது. கால்பந்து தான் முதன்மையான விளையாட்டு. கிரிக்கெட் ஒரு சில இடங்களில் மட்டும் தான் விளையாடப்பட்டு வருகிறது, ஃபுட்பாலோ உலகம் முழுவதும் விளையாடப்பட்டு வருகிறது.




தமிழ்நாட்டில் நம்மால் கால்பந்து விளையாட்டை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்ல முடியவில்லை. அதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. இதையெல்லாம் நன்கு கவனித்த நான் தமிழ்நாட்டில் கால்பந்து விளையாட்டை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என வேல்ஸ் ஃபுட்பால் கிளப்பை தொடங்கினேன். இந்த கிளப் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு இலவச பயிற்சிகளை வழங்கும். அவர்கள் தங்கி பயிற்சி மேற்கொள்ள வசதியாக அவர்களுக்கு ஒரு தங்குமிடமும் தயார் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் குக்கிராமங்களில் உள்ள ஃபுட்பால் மீது ஆர்வம் கொண்ட வசதியில்லாத பல மாணவர்கள் இருப்பார்கள். அவர்களை, கண்டெடுத்து வேல்ஸ் ஃபுட்பால் கிளப்பில் ஆட வைத்து இந்திய அணிக்கு அனுப்புவதுதான் எங்கள் நோக்கம். இவர்களுக்கு சர்வதேச அளவிலான பயிற்சிகள் வழங்கப்படும் என்பதை இங்கு பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் அதற்காக தான் ஸ்பெயின் கால்பந்து வீரர் திரு கெய்ஸ்கா டோகேரோவை, வேல்ஸ் ஃபுட்பால் கிளப்பின் சர்வதேச தூதராக நியமித்துள்ளோம். தமிழ்நாடு, தேசிய மற்றும் சர்வதேச அளவில் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம் அதற்கு கெய்ஸ்கா நமக்கு உதவுவார் என நம்புகிறேன். இந்த வருடம் நடக்க இருக்கும் ஐ-லீக்கில் வேல்ஸ் ஃப்சி மாணவர்கள் நிச்சயம் நல்ல இடம் பிடிப்பார்கள் என எனக்கு தெரியும். நல்ல நோக்கம் நிச்சயம் வெற்றி பெற செய்தியாளர்கள் இந்த செய்தியை தமிழ்நாட்டின் மூலை முடுக்கு வரை சென்று சேர்க்க வேண்டும்". 

அதேபோல முன்னணி விளையாட்டு ஆடை பிராண்டான PUMA, வேல்ஸ் கால்பந்து கிளப்புடன் கூட்டு சேர்ந்து முதல் அணிக்கான ஜெர்சிகளை ஸ்பான்சர் செய்கிறது. இதற்காக பூமாவின் தென் மண்டல தலைவர் திரு.ரமேஷ் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.


ஸ்பெயின் கால்பந்து வீரர்  கெய்ஸ்கா டோகேரோ பேசியதாவது, "வேல்ஸ் நிறுவனத்தின் நல்ல நோக்கத்தை ஆதரிக்கவே நானும் எனது அணியும் இங்கு வந்துள்ளோம். மாணவர்களுக்கு சர்வதேச பயிற்சி அளிக்கும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டதை நான் பெருமையாக கருதுகிறேன். எங்களுக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்த சென்னைக்கும், வேல்ஸ் நிறுவனத்திற்கும் நன்றி. இங்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி!" என்றார்.

Related Posts Plugin for WordPress, Blogger...